இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம்-நிர்மலா சீதாராமன் பேட்டி!

24 August 2019 அரசியல்
nirmala.jpg

நேற்றுப் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய திட்டங்களையும், அறிக்கையையும் வெளியிட்டார். அதில், நம் இந்திய நாடு, வளர்ந்த அமெரிக்கா மற்றும் சீனாவினை விட நல்ல வளர்ச்சி விகிதத்தினைக் கொண்டுள்ளது எனக் கூறினார்.

தற்பொழுது நிலவும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, பல வாகனத் தொழில் செய்யும் நிறுவனங்கள், தங்களுடைய வேலையாட்களைப் பணியிலிருந்து நீக்கி வருகின்றன. இந்நிலையில், பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது என நிதி ஆயாக்கின் துணைத் தலைவர் பேட்டி அளித்தார். இதனால் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இருப்பது உறுதியானது. இது குறித்து இன்று மாலை (23-08-2019) 5 மணிக்குப் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக, நிர்மலாசீதாராமன் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனிடையே நேற்று மாலை 5 மணிக்கு, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் நிர்மலா. அவர் கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அமெரிக்கா மற்றும் சீனாவினை விட நன்றாகவே உள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அக்டோபர் எட்டாம் தேதி விஜயதசமி அன்று, வருமான வரி தாக்கல் செய்தவர்களை அதிகாரிகள் மதிப்பீடு செய்வர் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS