கரையைக் கடந்த நிசர்கா புயல்! மரங்கள் வேரோடு சாய்ந்தன!

04 June 2020 அரசியல்
nisargar.jpg

எவ்வித சேதாரத்தினையும் ஏற்படுத்தாமல், நிசர்கா புயல் கரையினைக் கடந்தது.

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, வேகமாக புயலாக மாறியது. இதற்கு நிசர்கா எனப் பெயர் வைத்தனர். இது மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கரையைக் கடக்கும் என, வானிலை மையம் அறிவித்தது.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பலப் பிரிவுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இந்தப் புயலால் 110 கிமீ முதல் 120 கிமீ வரை காற்று வீசியது. மேலும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் என்ற பகுதியில் கரையைக் கடந்தது.

இந்தப் புயலால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், மின் கம்பங்கள் சாய்ந்தன. ஒரு சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு சில வீடுகளின் கூரைகளும் பலத்தக் காற்றால் பறந்து சென்றுவிட்டன.

HOT NEWS