அபராதத் தொகையை குறைத்து கொள்வதால் பிரச்சனை இல்லை! போக்குவரத்துத் துறை அமைச்சர்!

11 September 2019 சினிமா
nithingadkari.jpg

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து, அபராதங்களின் அளவும் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 80,000 ரூபாய் வரை, ஒருவர் அபராதம் கட்டியுள்ளார். டெல்லியில் ஒருவர், தன்னுடைய இரு சக்கர வாகனத்தையேக் கொளுத்தி உள்ளார். அந்த அளவிற்கு மிகவும் கடுமையாக (கொடுமையாக) மாறியுள்ளது, இந்த அபராத விதிப்பு.

இந்த நிலையில், குஜராத் உட்பட சில மாநிலங்கள், இந்த அபராத விதிப்பினைக் குறைத்துள்ளன. மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த விதியில், சில தளர்வுகளை அம்மாநில அரசுகள் தருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மாநிலங்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்றாற் போல், வாகன அபராதத்தினைக் குறைத்துக் கொள்ளலாம். அதில் எவ்விதத் தவறும் இல்லை. மேலும், அவர் பேசுகையில், வாகன ஓட்டிகள் ஒழுங்காக ஓட்டுவதற்கே, இந்த அபராதம் விதிக்கப்படுகிறது எனவம் கூறினார்.

HOT NEWS