அபராதத்தை உயர்த்தியதால் விதிமீறல்கள் குறைந்துள்ளன! நிதின்கட்கரி பேச்சு!

19 August 2019 அரசியல்
nitingadkari.jpg

வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உயர்த்தியதால், தற்பொழுது வாகன விபத்துக்கள் மற்றும் வாகன விதிமீறல்கள் பெரும் அளவில் குறைந்துள்ளதாக, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ளப் பேட்டியில், நாம் திருத்தி அமைத்த, அபாரத விதியின் காரணமாக, பொதுமக்கள் தற்பொழுது சாலையில், விதிகளைப் பின்பற்றுகின்றனர். மேலும், இது இன்னும் மாற்றம் அடைய வேண்டி உள்ளது.

இதுவரை ஒரு நாளைக்கு 34 கிலோ மீட்டர் சாலையை அமைத்து வந்தோம். தற்பொழுது ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதுவும் விரைவில் சாத்தியமாகும். அதே சமயம், அதற்கானப் பணத்தினை எல்ஐசியிடம் இருந்து கடனாக சுமார் 75,000 கோடியை பெற உள்ளோம். அதே போல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடமும், கிட்டத்தட்ட 50 ப்ராஜெக்ட்டுகளை சமர்ப்பித்துள்ளோம். இதன் மூலம், 50,000 கோடி ரூபாய் வரை, நமக்கு கடனாக கிடைக்கும்.

சாலைப் பாதுகாப்பு விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட உள்ளன. அவ்வாறு செய்வதன் மூலம், அப்பாவி பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் தொல்லையில் இருந்து, விடுபட முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS