பொதுமக்கள் தனியார் நிறுவனங்கள் 10 லட்சம் கோடி! மாநில அரசுகள் 20 லட்சம் கோடி தர வேண்டும்!

28 May 2020 அரசியல்
nithingadkari1.jpg

இந்தியாவில் தற்பொழுது பொருளாதாரப் பிரச்சனையானதை, கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இதற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய ஆலோசனை ஒன்றினை வழங்கி உள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, பொருளாதார மந்த நிலையானது, இந்தியாவில் நிலவி வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் முயற்சியில் பல முக்கிய அறிவிப்புகளை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மோடியின் அறிவிப்பிற்கு இணங்க, சுமார் 20 லட்சம் கோடியில் புதிய திட்டங்களையும், தொழில்துறையில் பல மாற்றங்களையும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியும், தனியார் துறைக்கு அதிக முக்கியத்துவமும் வழங்குவதாக அவர் அறிவித்தார். இந்த சூழ்நிலையில், தற்பொழுது புதிய ஆலோசனை ஒன்றினை வழங்கியுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி.

அவர் பேசுகையில், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய பங்களிப்பாக 10 லட்சம் கோடி ரூபாயினை வழங்க வேண்டும் எனவும், அதே போல் மாநில அரசுகள் சுமார் 20 லட்சம் கோடி ரூபாயினை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த முப்பது லட்சம் கோடியினை, ஏற்கனவே அறிவித்த 20 லட்சம் கோடியுடன் இணைத்து மொத்தம் 50 லட்சம் கோடியாக மாற்றிவிடலாம்.

அவ்வாறு உயர்ந்த பணத்தினைப் பயன்படுத்தி, இந்தியாவின் பொருளாதாரத்தினை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர இயலும் என்றுத் தெரிவித்தார். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகளை உருவாக்கவும் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS