கொரோனா மனிதர்களால் உருவாக்கப்பட்டது! நிதின் கட்கரி அதிரடி!

15 May 2020 அரசியல்
nithingadkari1.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவியுள்ள கொரோனா வைரஸானது, மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என, பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், இந்தியா ஒரு ஏழ்மை நாடு. அதனால், ஊரடங்கினை மாதத்திற்கு மாதம் நீட்டிக்க முடியாது. எனவே, நாம் ஊரடங்கினைத் தளர்த்துவது தான் சரி. ஊரடங்கு காலத்தில் பலப் புலம்பெயரும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், டிரக்குகள், லாரிகள், மற்றும் கிடைக்கின்ற அனைத்து வாகனங்களிலும் ஏறி பயணித்து வருகின்றனர்.

இது ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு ஆகும். நம் நாடானது, இந்த கொரோனா வைரஸினை எதிர்க்கும் நிலையில் உள்ளது. நம் விஞ்ஞானிகளும் தயாராக உள்ளனர். இது இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ். அதனால் தான், உலகின் பல நாடுகளால் தயாராக இருக்க இயலவில்லை. இதனால் தான், இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இந்தியாவின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டு, பாரதப் பிரதமர் மோடி 20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் பற்றிக் கூறினார். அதில் ஒரு பகுதியாக, நிர்மலா சீதாராமன் தற்பொழுது முதற்கட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் மூலம், சிறு குறு தொழில் செய்பவர்கள் அதிகப் பயனடைவர் எனக் கூறியுள்ளார் நிதியமைச்சர்.

HOT NEWS