நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்து! இறுகும் போலீஸ் பிடி!

06 February 2020 அரசியல்
nithyanandaspeech2.jpg

நித்தியானந்தாவினை ஏற்கனவே, போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது அவருக்கு வழங்கப்பட்டு இருந்த ஜாமீனை, ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களுக்கு முன், சுவாமி நித்தியானந்தா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது, அவருடைய பிடதி ஆசிரமத்தில் வேலை செய்து வந்த, லெனின் கருப்பணன் என்பவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்த பாலியல் வழக்கில், ஜாமீன் பெற்ற நித்தியானந்தா பின்னர் வழக்கம் போல தன்னுடைய பிரசங்கங்களையும், ஆன்மீக பயணத்தையும் தொடர்ந்தார்.

இந்நிலையில், அவருடைய செல்வாக்கானது உலகின் பிற நாடுகளுக்கும் பரவியது. குஜராத்தினைச் சேர்ந்த, ஜனார்த்தன ஷர்மாவின் இரண்டு மகள்களுடன் சாமியார் நித்தியானந்தா தலைமறைவானார். இதனையடுத்து, அவரைப் பிடிப்பதற்கு இண்டர்போல் உதவியினை இந்தியா நாடியது. இருப்பினும், ஒரு பயனும் இல்லை. அவர் தற்பொழுது ஆன்மீக சுற்றுலாவில் இருக்கின்றாராம். இதனை அடுத்து, தன்னுடைய பாலியல் புகாரில், நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்டு இருந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என, லெனின் கருப்பணன் கர்நாடக நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதி, நித்தியானந்தா இது குறித்து பதிலளிக்க வேண்டும் என அறிவித்தார். இருப்பினும், அவர் இங்கு இல்லை. அதே சமயம், போலீசாரால் அவரிடம் அளிக்க வேண்டிய கடிதத்தினையும் அளிக்க இயலவில்லை.

இதனைத் தொடர்ந்து, நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்டு வந்த ஜாமீனை தள்ளுபடி செய்வதாக, கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்து விட்டது. நீதிபதி மைக்கேல் டீ குன்ஹா, நித்தியானந்தாவின் ஜாமீனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மைக்கேல் டீ குன்ஹா தான் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, நித்தியானந்தாவினைக் கைது செய்ய, கர்நாடக போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இருந்தும் என்ன ப்ரயோஜனம்? நித்தியானந்தா எங்கு இருக்கின்றார், அவர் என்ன செய்கின்றார் என்பது குறித்தத் தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை.

HOT NEWS