நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலாவில் உள்ளார்! நீதிமன்றத்தில மனு!

04 February 2020 அரசியல்
nithayanandha21.jpg

தேசிய அளவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, தற்பொழுது ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள கர்நாடக போலீசார் கூறியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளினால், நித்தியானந்தா தலைமறைவாக இருக்கின்றார். இவரைப் பிடிப்பதற்கு, இண்டர்போல் உதவியினை மத்திய அரசு நாடியது. மேலும், தான் சொந்தமாக ஒரு நாட்டினை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கு கைலாசா எனப் பெயர் வைத்துள்ளதாகவும், அவர் தன்னுடைய பிரசங்க வீடியோக்களில் அறிவித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத மத்திய அரசு அதிர்ந்தது. ஈக்குவேடார் நாட்டின் கடற்பகுதிகளில் அமைந்துள்ள தீவு ஒன்றினை வாங்கிய நித்தியானந்தா, அதனை தனி நாடாக உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு, கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

தற்பொழுது அந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என, லெனின் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து, நித்தியானந்தாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பக் கூறியது. ஆனால், அவர் பிடதியில் இல்லாததால், அங்கு நிர்வாகியாக இருக்கும் அர்ச்சனானந்தாவிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால், நித்தியானந்தாவின் சார்பில், அர்ச்சனானந்தா ஆஜர் ஆனார்.

அவர் கூறுகையில், போலீஸார் என்னை வற்புறுத்தி, இந்த நோட்டீஸை வாங்க வைத்ததாகவும், ஆனால் நித்தியானந்தா எங்கு இருக்கின்றார் என எனக்குத் தெரியாது எனவும் கூறியிருக்கின்றார். இதனால், போலீசாரின் செயலைக் கண்டித்த்து நீதிமன்றம். இதற்கு விளக்கமளித்த போலீஸ் தரப்பு, நித்தியானந்தா தற்பொழுது ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதாகவும், அவர் இல்லாத காரணத்தினால் தான் அர்ச்சனானந்தாவிடம் இதனை வழங்கியதாகவும் கூறியுள்ளது.

HOT NEWS