கைலாசாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை! நித்தியானந்தா தகவல்!

16 March 2020 அரசியல்
nithyanandavideo.jpg

நாளுக்கு நாள், நித்தியானந்தாவின் தொல்லை தாங்க முடியவில்லை என்றுக் கூறலாம். அந்த அளவிற்கு மனிதர், தன்னுடைய வீடியோ பிரசங்கங்களின் மூலம், குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு ஆதரவு தெரிவிக்க, தன்னுடைய ஆதரவாளர்களையும் ஆன்லைனில் களமிறிக்கி உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதனால், இந்திய உட்பட பல நாடுகள், தங்களுடைய எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளனர். வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும், சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 6,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இவ்வளவு பிரச்சனைகள் போய் கொண்டு இருக்கையில், தன்னுடையப் பிரசங்க வீடியோவினை வெளியிட்டார் நித்தியானந்தா. அதில், தன்னுடைய கைலாசா நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், நாட்டில் பாதுகாப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது தற்பொழுது சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. அவரைத் தேடப்படும் நபராக அறிவித்துள்ள இன்டர்போல், ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஏற்கனவே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS