விருப்பத்தின் பெயரில் தான் ஆசிரமத்தில் இருக்கின்றேன்! பிராணானந்தா நீதிமன்றத்தில் தகவல்!

07 January 2020 அரசியல்
nithyanandavideo.jpg

நித்தியானந்தாவின் பெயர் நாளுக்கு நாள் பிரபலமாகி வருவதற்கு, அவர் மீது தொடுக்கப்படும் வழக்குகளேக் காரணம் என அவரே ஒரு வீடியோப் பதிவில் கூறிவிட்டார். அந்த அளவிற்கு அவருடைய வழக்குகள், தற்பொழுது தீவிரம் அடைந்து வருகின்றது.

தற்பொழுது நித்தியானந்தா எங்கு இருக்கின்றார் என, அரசாங்கத்திற்கும் தெரியவில்லை. அவருடைய பக்தர்களுக்கும் தெரியவில்லை. அந்த அளவிற்கு மனிதர் மிகப் பாதுகாப்பாக இருக்கின்றார்.

இந்நிலையில், பிடதி ஆசிரமத்தில் தன்னுடைய மகன் அடைத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக, அங்குலெட்சுமி என்ற பெண் வழக்குத் தொடர்ந்தார். ஈரோடு மாவட்டத்தினைச் சேர்ந்த அங்குலெட்சுமி என்ற பெண், தன்னுடைய மகனை காப்பாற்றும் படி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த 2003ம் ஆண்டு, என்னுடைய மகன் நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்தார். அவர், ஒரு பல் மருத்துவர். பிடதியில் சேர்ந்த பின் அவருக்கு, பிராணனந்தா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதிலிருந்து அவரை, நான் பெரும்பாலும் காண இயலவில்லை. கடந்த மாதம் கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ளவர்கள் தாக்கப்பட்டனர் எனக் கேள்விப்பட்டதை அடுத்து, நான் ஆசிரமத்திற்குச் சென்று பார்த்தேன். ஆனால், அங்கு என் மகனைப் பார்க்க அனுமதிக்கவில்லை எனவும், என் மகனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், பிராணனந்தாவினை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட்டது. அவரை போலீசார் ஆஜர்படுத்திய நிலையில், பிராணனந்தாவிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டது. அப்பொழுது, அங்கு வந்த பிராணனந்தா, நான் என்னுடைய சொந்த விருப்பத்துடன் தான் அங்கு தங்கியிருப்பதாகவும், யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கினை முடித்து வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

HOT NEWS