நான் கைலாசா நாட்டின் அதிபர் அல்ல எனவும், நான் கைலாசா நாட்டின் கடவுள் எனவும் நித்தியானந்தா கூறியுள்ளார்.
இன்று விநாயகர் சதுர்த்தி திருநாளினை முன்னிட்டு, தன்னுடைய கைலாசா நாட்டின் பணம் மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து அறிவிக்க உள்ளதாக, நித்தியானந்தா ஏற்கனவ தெரிவித்து இருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று காலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.
தன்னுடைய நாட்டில் பணமானது, தங்க நாணயங்களாக இருக்கும் என்றுக் கூறிய அவர், அது குறித்தப் புகைப்படங்களை வெளியிட்டார். கால் காசு பணமானது, 2.91 கிராம் அளவுடையது. அரை காசு என்பது 5.83 கிராம் எடைக் கொண்டது. முக்கால் காசின் அளவானது 8.74 கிராம் எடைக் கொண்டது. ஒரு காசு 11.66 கிராம் அளவுடையது. 2 காசு என்பது 23.32 கிராம் அளவுடையது. 3 காசின் எடையானது, 34.99 கிராம் எடைக் கொண்டது. 4 காசு பணமானது 46.65 கிராம் எடைக் கொண்டது. 5 காசின் அளவானது 58.31 கிராம் எடை கொண்டது. பத்து காசு 116.63 கிராம் எடைக் கொண்டது.
தன்னுடைய நாட்டில் பணமானது தங்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும், தன்னுடைய நாட்டில் அனைவருக்கும் இலவச உணவு, இலவச சுகாதார வசதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளர். தன்னுடைய நாட்டிற்கு வர எவ்விதத் தடையும் இல்லை என்றுக் கூறிய நித்தியானந்தா, இலவச இ-விசா, இ-பாஸ்போர்ட், இ-குடியுரிமையானது வழஙப்படும் என்றுக் கூறியுள்ளார்.
நான் இந்தியாவிற்கும், இந்து சமூகத்திற்கும் தொண்டாற்ற விரும்பியதாகவும், ஆனால், தொடர்ந்து உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல், சட்டத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள், பெயருக்கு ஏற்பட்ட களங்கம் ஆகியவைகள் இந்து வெறுப்பாளர்கள் மற்றும் ஆன்டி இந்தியன்கள் ஏற்பட்டன. இதனால் தான், நான் இந்தியாவினை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்றுக் கூறினார். நான் இறந்தப் பின்பு, என்னுடைய பொருட்கள் சொத்துக்கள் அனைத்தும் இந்தியாவிற்கே சொந்தம் எனவும், என்னுடைய உடலும் இந்தியாவிற்கே சொந்தம் எனவும் கூறினார்.
தான் இந்த உடலை விட்டுப் பிரிந்த பின்பு, என்னுடைய பூத உடலானது, பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தில் அடக்கம் செய்யப்படும் எனவும் கூறினார். தன்னுடைய நாட்டில் யார் வேண்டும் என்றாலும், குடியுரிமைப் பெறலாம் எனவும், எப்படி கிறிஸ்தவர்களுக்கு வாட்டிகன் நகரம் உள்ளதோ, அதே போல் இந்துக்களுக்கு கைலாசா இருக்கும் என்றார். மொத்தம் உலகில் உள்ள 200 கோடி இந்துக்களுக்கு இது சமர்பணம் என்றும் கூறியுள்ளார்.
கைலசாவில் அனைத்தும் பிரம்மச்சாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றுக் கூறிய நித்தியானந்தா, தன்னுடைய நாட்டின் முத்திரையினை வெளியிட்டார். இந்த முத்திரையானது, அரச முத்திரையாகப் பயன்படுத்தப்படும் என்றுக் கூறினார். மொத்தும் 100 புத்தகங்கள் மற்றும் 360 ஆர்டிகல்களைப் படித்து, இந்த நாணயங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன எனவும், இந்துக்களின் ஆட்சியில் இருந்த 56 நாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களினை அடிப்படையாக வைத்து, இந்த நாணயங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார் நித்தியானந்தா.