நித்தியின் சீடர் தற்கொலை! தொடரும் மர்ம மரணங்கள்!

06 March 2020 அரசியல்
nithayanandha21.jpg

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் என்றால், அது நித்தியானந்தா மட்டுமே என்றுக் கூடக் கூறலாம். அந்த அளவிற்கு, மனிதர் மீது பல புகார்களும், வழக்குகளும் உள்ளன.

இவர் மீது பெரும்பாலும் ஆள் கடத்தில், நில அபகரிப்பு மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்குகளே அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், நித்தியானந்தாவோ, எதற்கும் சளைக்காமல் கூலாக, தன்னுடைய பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.

மேலும், தனக்கென கைலாசா என்ற ஒரு நாட்டினையும் உருவாக்கி உள்ளார். இதற்கு, கிட்டத்தட்ட அனுமதி கிடைத்துவிடும் என்றேக் கூறப்படுகின்றது. இருப்பினும், ஆளும் மத்திய அரசினை அவர் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார் என்பதால், மத்திய அரசு அவர் மீது கடும் கோபத்தில் உள்ளது. அவருடையப் பக்தர்கள் பலரும், தற்சமயம் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், பெரிய அளவில் சந்தேகத்தினை எழுப்பி உள்ளது.

கைலாசா நாட்டினைச் சேர்ந்தவன் என பேஸ்புக்கில், தன்னுடைய கணக்கில் பதிவு செய்திருந்த நித்தியானந்தாவின் சீடர் தினேஷ் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துள்ளார். இதுவரை, தன்னை கைலாசாவாசி எனக் கூறி தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது நான்காக உயர்ந்துள்ளது.

27 வயது நிரம்பிய முதுகலைப் பட்டதாரியான தினேஷ் என்பவர், நித்தியானந்தாவின் பேச்சினால் ஈர்க்கப்பட்டு, 2017ம் ஆண்டு, நித்தியின் சீடராக சேர்ந்துள்ளார். மேலும், தன்னுடையப் பெயரினை ஸ்ரீநித்ய வீர பத்ரானந்தா எனவும் மாற்றிக் கொண்டுள்ளார். இவர், நித்தியானந்தாவிற்கு ஆதரவான, மீம்ஸ் குழு, என் நியூஸ் என்ற யூடிப் சேனல்களிலும் பணியாற்றி வந்திருக்கின்றார்.

இவர், அந்த ஆசிரமத்தில் பணிபுரிந்த பெண்ணைக் காதலித்துள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து, அவ்வப்போது அந்தப் பெண்ணை தினேஷ் சந்தித்துள்ளார். அவரை பொம்பள பொறுக்கி என்ற எண்ணத்தில், அந்தப் பெண் தந்தை அவதூறாகப் பேசி, அந்தப் பெண்ணின் மனதை மாற்றியுள்ளார். இதனால், அந்தப் பெண்ணும் தினேஷுடன் பேச மறுத்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த தினேஷ், வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். பின்னர், தூக்கிட்டுத் தற்கொலையும் செய்து கொண்டார். இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS