மீனாட்சி மீனாட்சி! என்னாச்சு என்னாச்சு! நித்தியானந்தாவின் அசத்தல் பேச்சு!

11 December 2019 அரசியல்
nithayanandha21.jpg

எப்பொழுதும் டிரெண்டிங் என்றால் அது மோடி தான். ஆனால், அவரையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் சுவாமி நித்தியானந்தா. கடந்த சில நாட்களாக, நித்தியானந்தாவின் பெயரே, சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

அந்த அளவிற்கு அவர் பேச்சு வைரலாகி வருகின்றது. அதனை அவரே ஒரு வீடியோவில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அவர் எப்படி இவ்வளவு பெரிய ஆளாக மாறினார் என்பது பற்றியும் அவர் விரிவாகக் கூறியுள்ளார்.

மதுரையில் அவரைக் கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை எனவும், அதனால் அவர் திருவண்ணாமலைக்குச் சென்றதாகவும் அங்கும் அவரை ஆதினத்தில் சேர்த்துக் கொள்ளாததால், பெங்களூருவுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள செட்டியார் குடும்பத்தார், வாரம் 101 ரூபாய் தருவதாகக் கூறியதாகவும், அதற்காக வாரம் ஒரு முறை பெங்களூரு சென்று வந்ததாகவும், பின்னர் ஒரு நாள் அவர் சமாதி நிலையில் அமர்ந்ததாகவும், அப்பொழுது ஒரு தம்பதியினர், இவரிடம் ஆசிர்வாதம் வாங்க வந்ததாகவும் கூறினார்.

அப்பொழுது, கண்களை மூடி இருந்ததால் தட்டினைத் தொட்டு ஆசிர்வாதம் செய்ததாகவும் அந்தத் தட்டில் அண்ணாச்சிப் பழம் இருந்ததாகவும், அந்தப் பழத்தினை உண்ணச் சொன்னதாகவும் பேசியுள்ளார். பொதுவாக, அண்ணாச்சிப் பழம் சாப்பிட்டால் கர்ப்பம் கலையும். ஆனால், ஆசிர்வாதம் செய்ததால் அண்ணாச்சிப் பழத்தினைச் சாப்பிட்ட தம்பதிக்கு குழந்தைப் பிறந்தது. அவ்வளவு தான், இந்த செய்தியினைக் கேள்விப்பட்ட பக்தர்கள், கையில் தட்டுடன் அண்ணாச்சிப் பழத்தினைக் கொண்டு வந்தனர். அவைகளைத் தொட்டு ஆசிர்வாதம் செய்ததால், அண்ணாச்சி பழத்தின் முட்கள் கையில் குத்தி, வலிக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

பெங்களூருவுக்கு பொட்டியடிப் பையனாக வந்ததாக குறிப்பிட்ட நித்தியானந்தா, அன்னை மீனாட்சியிடம் மீனாட்சி, மீனாட்சி என்னைக் கோவிலில் பூஜை செய்ய விடமாட்டேங்குறாங்கன்னு சொன்னேன், அவ்வளவு தான். ஒரு கோவிலைத் தயார் கட்டிக் கொடுத்துவிட்டார். மீனாட்சி மீனாட்சி, என்னை ஆதினத்திற்குள் விடமாட்டேன் என்கிறார்கள் என்றேன். சொந்தமாக ஒரு ஆதினத்தையே உருவாக்கித் தந்துவிட்டார். தற்பொழுது, மீனாட்சி மீனாட்சி என்னுடைய பாஸ்போர்ட்டினை ரினீவல் செய்யமாட்டேன் என கூறுகின்றார்கள் என்றேன். அவ்வளவு தான் சொந்தமாக ஒரு நாடே எனக்குத் தந்துவிட்டாள் எனக் கூறினார்.

யாருக்கு என்னப் பிரச்சனை என்றாலும், மீனாட்சி மீனாட்சி என்றுக் கூறினாலேப் போதும். பிரச்சனைகளை அவள் பார்த்துக் கொள்வாள் என்று கூறியுள்ளார் கைலாய நாட்டின் அதிபர் நித்தியானந்தா.

HOT NEWS