கைலாசத்தில், தமிழ், சமஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழிகள்! நித்தியானந்தா அறிவித்தார்!

06 December 2019 அரசியல்
nithyanandavideo.jpg

இந்தியாவில் தற்பொழுது தேடப்பட்டு வரும் முக்கியப் புள்ளியாக நித்தியானந்தா உள்ளார். அவர், உத்திரப்பிரதேசத்தில் இருந்து, நேபாளம் சென்று, அங்கிருந்து ஈக்குவேடார் நாட்டில் தனியாக ஒரு தீவு வாங்கி, அதில் கைலாசா என்ற நாட்டினை தனியாக உருவாக்கிவிட்டார்.

இந்நிலையில், அவர் இந்தியாவின் இமாலயப் பகுதிகளில் தான் பதுங்கி இருக்கின்றார் என, போலீசார் கூறி வருகின்றனர். இவ்வளவு பிரச்சனைகள் சென்று கொண்டு இருந்தாலும், நித்தியானந்தா மிக கூலாக வீடியோக்களில் பேசி வருகின்றார்.

அவர் தற்பொழுது வெளியிட்டுள்ள வீடியோவில், மகாபாரதப் போரின் பொழுது, பயன்படுத்தப்பட்ட சமஸ்க்ருதம், தமிழ் மொழிகள் ஆகியவற்றுடன் ஆங்கிலமும் அதிகாரப்பூர்வ மொழியாக கைலாசத்தில் இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், மொத்தம் 108 துறைகள் அங்கு தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கைலாசத்தில் கல்வி இலவசமாக வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இதுவரை, 108 பாடப்பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆயுர்வேதா, சித்தா, ஜோதிடம், காஸ்மாலஜி உள்ளிட்டப் பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது எனவும் பேசியுள்ளார்.

கைலாசத்திற்கு வர விரும்புபவர்கள் இந்துக்களாக மாற்றப்படமாட்டார்கள் எனவும், அங்கு ஆகம விதிகளின்படியே அனைத்தும் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். இதுவரை உருவாகியுள்ள பழைய புராணங்கள், மந்திரக் குறிப்புகள், கலைகள் பற்றியக் குறிப்புகள் முதல் அனைத்துமே சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அனைவருக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

மீடியாக்களில் ஐந்தாண்டுகளாக, நான் கைலாசா நாட்டிற்காக முயற்சித்து வருவதாக கூறி வருகின்றனர். டேய், நான் பிறந்ததில் இருந்தே அதற்காகத்தான் முயற்சித்து வருவதாகவும், நான் பிறந்ததே அதற்காகத் தான் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS