உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் நித்தியானந்தா வழக்கில் திடீர் டிவிஸ்ட்!

28 December 2019 அரசியல்
nithyanandaspeech2.jpg

மத்திய உள்துறை அமைச்சகம் நித்தியானந்தா எங்கு இருக்கின்றார் என தெரியவில்லை என்று, அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டது. இருப்பினும், நித்தியானந்தா தன்னுடைய ஆன்மீக சொற்பொழிவை, யூடியூப் மூலம் நிகழ்த்தி வருகின்றார்.

முந்தைய நிலையைக் காட்டிலும், தற்பொழுது மிகவும் கலகலப்பாக பேசுகின்றார். அதனை அவரேக் கூறுகின்றார். தான் ஆன்மீக பணிகளை செய்வதற்காக உயிருடன் இருப்பதாகவும், விரைவில் கையிலாயத்தினை உருவாக்கி அதனை இந்து மதத்திற்காக பயன்படுத்த உள்ளதாகவும் பேசி வருகின்றார்.

இதனிடையே, தன்னுடைய இரண்டு மகள்களை காணவில்லை என, குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் விசாரிக்க உத்தரவிட்டது. இதனிடையே, காணாமல் போன நான்கு மகள்களில் இரண்டு மகள்கள் கிடைத்தனர். இரண்டு பேருக்கு என்ன ஆனது என்றேத் தெரியவில்லை என போலீசார் தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவரை தேடும் நபராக அறிவித்தது நீதிமன்றம். இருப்பினும், ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அவரை யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கிடையில், காணாமல் போனதாக கூறப்பட்ட அந்த இரண்டுப் பெண்களும், வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் கடத்தப்படவில்லை எனவும், நாங்கள் எங்களின் விருபத்துடனேயே நித்தியானந்தாவுடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்கள், தற்பொழுது அமெரிக்காவில் இருப்பதாகவும், இந்தியாவில் எங்கள் உயிருக்கு ஆபத்து எனவும் கூறியுள்ளனர்.

மேலும், தங்களுடையத் தந்தை நிதி மோசடி செய்தவர் எனவும், அவரை சுவாமி நித்தியானந்தாவே காப்பாற்றினார் எனவும் அப்பெண்கள் கூறினர். இதனையடுத்து, நீதிமன்றம் நேற்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அப்பெண்கள் எந்த நாட்டில் உள்ளார்களோ, அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வந்து, ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை அடுத்த, ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம். இதனால், நித்தியானந்தாவிற்கு மிகப் பெரிய அளவில், சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

HOT NEWS