நித்தியானந்தாவின் அட்டகாசம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
நித்தியானந்தாவினைத் தெரியாத இந்தியர்களேக் கிடையாது எனும் அளவிற்கு, மனிதர் பல மாநிலங்களில் தேடப்படும் நபராக மாறியுள்ளார். ஆட்கடத்தில், பாலியல் புகார் மற்றும் கொலைப் பலி உள்ளட்ட விவகாரங்களால், அவரை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகின்றனர். இருப்பினும், நித்தியோ ஹாயாக இருக்கின்றார். அவர் எங்கு இருக்கின்றார் என, யாருக்கும் தெரியாது.
ஆனால் அவர், மிகவும் கூலாக தினமும் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார். மேலும், தான் புதிதாகக் கைலாசா நாட்டினை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கான கரண்சி குறித்த அறிவிப்புகளை வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாகவும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த விஷயமும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்பொழுது அவர் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக, நித்தியானந்தாபீடியா என்றப் புதிய வலைதளம் ஒன்றினை உருவாக்க உள்ளதாகவும், விக்கிப்பீடியாவினைப் போல அது செயல்படும் எனவும், விரைவில் அது வெளியாகும் எனவும் கூறியுள்ளார். உண்மையில் எங்கு தான், அந்த கைலாசா நாடு இருக்கின்றது எனப் பலருக்கும் தெரியாது.
ஏன் இந்திய அரசிற்கும் கூட தெரியாது. ஆனால், ஐநா அமைப்பிடம் தன்னுடைய நாட்டிற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என, அவர் கோரிக்கை வைத்து இருக்கின்றார். இதற்காக, பல செயல்களிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். அடையாளம் இல்லாத கைலாசா நாடானது, தற்பொழுது நித்தியானந்தாவின் அறிவிப்புகளால் கலைக்கட்டி உள்ளது. அவர் ஆகஸ்ட் 22ம் தேதி என்ன அறிவிப்பார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.