நிதின் கட்கரி வேதனை! வீரசாவர்க்கரை விமர்சிக்கின்றார்கள்!

02 March 2020 அரசியல்
nitngadkarisavarkar.jpg

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் பொழுது பேசிய நிதின் கட்கரி, வீரசாவர்க்கரை விமர்சிப்பது வேதனை அளிக்கின்றது எனத் தெரிவித்தார்.

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தொண்டர்கள் முன்னிலையில் பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், நான் ஒரு பெரிய தலைவரை சந்தித்தேன். அப்பொழுது, வீரசாவர்க்கரைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம் எனக் கூறினேன். அதற்கு அவர், நீங்கள் ஆர்எஸ்எஸ்ஸா, எனக் கேட்டார். அதற்கு நான் ஆம் என்றேன்.

அதற்கு அவர் நீங்கள் மிகவும் நல்லவர் எனக் கூறினார். நான் நல்லவன் என்றால், ஆர்எஸ்எஸ்ம் நல்லது தான். வீரசாவர்க்கரும் நல்லவர் தான். அது கெட்டது என்றால், வீர சாவர்க்கர் கெட்டவர் என்றால், நானும் கெட்டவன் தான். பல ஆண்டுகளாக, ஆர்எஸ்எஸ் மற்றும் வித்யார்த்தி பரிசத் அமைப்புகள் மீது, மோசமான எண்ணங்களை பொதுமக்களை கொண்டிருந்தனர். அதனை, அந்த அமைப்பின் தொண்டர்கள் தான், மாற்றி அமைத்தனர்.

வீர சாவர்க்கரைப் பற்றி அவதூறாகப் பேசும் பொழுது, நான் மிகவும் மனவருத்தம் அடைகின்றேன். நாம் நம்முடைய எதிரிகளிடம் பேசும் பொழுது, அவர்களுடைய எண்ணங்களையும், அபிப்பிராயங்களையும் மாற்ற இயலும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு, பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பலத்த கரகோஷம் எழுப்பி, ஆராவாரம் செய்தனர்.

HOT NEWS