மாநில அரசுகளிடம் பணம் இல்லை! 10லட்சம் கோடி இழப்பு! நிதின் கட்கரி பேச்சு!

12 June 2020 அரசியல்
nithingadkari.jpg

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மாநில அரசுகளிடம் தற்பொழுது பணம் இல்லை எனவும், அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்குவது என அவர்கள் குழம்பி இருப்பதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், இந்தியா முழுவதும் தற்பொழுது ஜன் சம்வாத் என்ற நிகழ்வானது, காணொலி மூலம் நடைபெற்று வருகின்றது. இதில், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். இதில் கலந்து கொண்ட நிதின் கட்கரி பேசுகையில், கொரோனா வைரஸால் நாட்டிற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதனால், மாநில அரசுகளிடமும் போதுமான பணம் இல்லை. இந்த சூழ்நிலையில், அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், இதனையும் இந்த அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாண்டு வருகின்றது. கடந்த 55 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினால் செய்ய முடியாத செயல்களை, பாஜக அரசாங்கம் மோடியின் தலைமையில் வெற்றிகரமாக செய்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டு வருகின்ற பொருளாதார, சுகாதார பாதிப்புகளை நாம் நேரடியாக எதிர்த்து வருகின்றோம். தீவிரவாதிகளையும், நாட்டிற்கு எதிரான அந்நிய சக்திகளையும் நாம் கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்கி வருகின்றோம். மோடியின் ஆட்சியில் நாம் பல மகத்தான சாதனைகளை செய்து வருகின்றோம் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS