பாஜகவுடன் இணைந்து, பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நிதிஷ்குமார் தற்பொழுது முதல்வராகப் பொறுப்பேற்று உள்ளார்.
பீகாரில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜகக் கூட்டணியானது 125 இடங்களில் வென்று ஆட்சியினைக் கைப்பற்றியது. இந்த நிலையில், நிதிஷ் குமார் நேற்று பீகார் ஆளுநர் மாளிகையில் முதல்வராகப் பொறுப்பேற்றார். அம்மாநில ஆளுநர் தக்ரிஷோர் பிரசாத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாஜக கட்சியினைச் சேர்ந்தவர்கள் துணை முதல்வர்களாகவும், முக்கிய மந்திரிகள் பதவியினையும் பிடித்துள்ளனர்.
பதவிப் பிரமாணம் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் கலந்து கொண்டனர். இது குறித்துக் கூறிய நிதிஷ் குமார், தனக்கு முதல்வர் பதவி மீது ஆர்வம் இல்லை எனவும், பாஜக கேட்டுக் கொண்டதாலேயே முதல்வராக பதவி ஏற்றதாகவும் கூறியுள்ளார்.