ஜனதா தள கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஜனதா தளக் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றன. இந்த சூழலில், வயோதிகம் காரணமாக நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனவும், இருப்பினும், பாஜக கேட்டுக் கொண்டதன் காரணமாகவே, முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன் என்றுக் கூறினார் நிதிஷ்குமார். விரைவில் அவர் தன்னுடைய கட்சிப் பணிகளை எல்லாம், வேறு ஒருவரிடம் வழங்குவார் என, அரசல் புரசலாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த சூழலில், தன்னுடையக் கட்சியின் தலைவர் பதவியினை ஆர்சிபி சிங்கிடம் நேற்று வழங்கினார் நிதிஷ். கடந்த 2010ம் ஆண்டு முதல் கட்சியின் தலைவராக இருந்து வருகின்ற நிதிஷ்குமார், தற்பொழுது அக்கட்சிக்கு புதியத் தலைவரையும் நியமித்து உள்ளார். இந்த ஆர்சிபி சிங், அடுத்த மூன்று ஆண்டுகள் கட்சியின் தலைவராக இருப்பார் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கேசி தியாகி தெரிவித்து உள்ளார். ஆர்சிபி சிங், தற்பொழுது ராஜ்யசபா எம்பியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.