கைலாசாவிற்கு புதிய கரன்சி! ரிசர்வ் வங்கி! விநாயகர் சதுர்த்திக்கு புதிய அறிவிப்பு!

13 August 2020 அரசியல்
nithayanandha21.jpg

ஆனாலும் கொரோனா வைரஸ் பரவினாலும் பரவியது, நம்ம நித்தியானந்தாவினைத் தான் பார்க்கவே இயலவில்லை. அவரைப் பற்றிய எவ்வித செய்தியும் வெளியாகாமல் இருந்து வந்தன. தற்பொழுது அதற்குத் தீனி போடும் விதமாக, புதிய அதிரடி அறிவிப்புகளை கைலாசா நாட்டு உரிமையாளர் நித்தியானந்தா வெளியிட்டு உள்ளார்.

கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், நித்தியானந்தா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரைத் தேடும் நபராக, இந்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், அவரைக் கண்டுபிடிக்க இயலாதக் காரணத்தால் அவரைக் கண்டுபிடிக்க, சர்வதேச போலீசின் உதவியினை இந்திய அரசு நாடியது. அந்த அமைப்பும், உலகின் அனைத்து நாடுகளுக்கும் ப்ளூ கார்னர் நோட்டீசினை அனுப்பியது.

இதுவரை நித்தியானந்தா எங்கு இருக்கின்றார் என, யாருக்கும் தெரியவில்லை. அவர் தனியாக கரீபியன் கடற்பகுதிகளில் புதிதாக தீவு ஒன்றினை வாங்கி, அங்கு புதிதாக கைலாசா என்ற நாட்டினையே உருவாக்கி உள்ளார். அங்கு தமிழ், சமஸ்க்ருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு அனுமதியும் வழங்கி உள்ளார். அந்த நாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகளை, தன்னுடைய இணையதளத்தில் அவர் வெளியிட்டார்.

அதில் பல லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும், சர்வர் க்ராஸ் ஆகும் அளவிற்கு வருகை இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தக் காலங்களில், அவர் அமைதியாக இருந்து வந்தார். ஆனால், தற்பொழுது மீண்டும் தன்னுடைய யூடியூப் சேனல்கள் மூலம், எங்கிருந்து கொண்டோ தன்னுடைய பிசங்கங்களை அளித்து வருகின்றார். அவர் தற்பொழுது தன்னுடைய வலைதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.

அதில், அனைவருக்கும் என்னுடைய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். கைலாசா நாட்டிற்காக அனைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டு, புதிதாக ஒரு வங்கியினைத் தொடங்கி உள்ளேன். அதில் உள்நாட்டிற்காக ஒரு பணமும், வெளிநாடுகளுக்காக ஒரு பணமும் தயாராக உள்ளது. வாட்டிகன் நகரினைப் பின்பற்றி, புதிதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்றப் புதிய ரிசர்வ் வங்கியானது உருவாக்கப்பட்டு உள்ளது.

வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று, புதிய அறிவிப்புகளையும், நிதித்துறை மற்றும் இந்த பணத்திற்கானப் பெயரினை அறிவிக்க உள்ளேன் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது பரபரப்பினைக் கிளப்பி உள்ளது.

HOT NEWS