மருத்துவமனைகளில் நிர்வாணம்! தப்லிகி பங்கேற்பாளர்கள் அட்டூழியம்! போலீஸில் புகார்!

03 April 2020 அரசியல்
nizamuddintargah.jpg

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிகி மாநாட்டில் பங்கேற்றவர்கள், நிர்வாணமாக நடப்பதால், போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை, டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள, தப்லிக்-ஈ-ஜமாத் அமைப்பின் சார்பில், மிகப் பெரிய மதப் பிரசங்கக் கூட்டம் நடைபெற்றது. அதில், வெளிநாட்டினைச் சேர்ந்தவர்கள் முதல், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இஸ்லாமிய மதக் குருக்கள் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பினர்.

இதில், தற்பொழுது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலரும் தங்களை தாமாக முன்வந்து அடையாளம் காட்டிக் கொள்ளும் படி, மத்திய அரசும், மாநில அரசுகளும் கேட்டுக் கொண்டன. மேலும், அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டன.

இந்நிலையில், டெல்லி காசியாபாத் நகரில் உள்ள எம்எம்ஜி மருத்துவமனையில், அடையாளம் காணப்பட்டவர்கள் அனுமதிக்கப்படனர். அவர்கள் நோய் தொற்று உள்ளவர்களாக இருப்பதனால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் நிர்வாணமாக நடப்பதாகவும், செவிலியர்களிடம் ஆபாசமாக சைகைகளைக் காட்டுவதாகவும், தரைகளில் எச்சிலைத் துப்புவதாகவும் புகார்கள் குவிந்தன. மேலும், அவர்கள், புகைப்பிடிக்க சிகரெட் வேண்டும் எனவும் கேட்பதாகவும் கூறப்பட்டது.

இதனால், எங்களால் சிகிச்சை அளிக்க முடியாது என, மருத்துவர்கள் கூறினர். இதனை வழக்காகப் பதிவு செய்துள்ள காசியாபாத் காவல்துறையினர், நோயாளிகளை வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS