பொருளாதாரத்தில் பாதிப்பில்லை! நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்!

12 February 2020 அரசியல்
nirmalasitharamanloan.jpg

கடந்த காலத்தினைக் காட்டிலும், தற்பொழுது பொருளாதார பாதிப்புகள் இல்லை எனவும், வளர்ச்சி தெரிய ஆரம்பித்துவிட்டது எனவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதமானது, தற்பொழுது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. அதில், ப சிதம்பரம், இந்தியப் பொருளாதாரம் அதள பாதாளத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. இது, மிகப் பெரிய பிரச்சனையில் சென்று முடியும் என்றுக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் வரி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும், பணப்பற்றாக்குறை வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார். அவர் கூறுகையில், 14-15ம் ஆண்டுகளில் 4.1 சதவிகிதமாக இருந்ததாகவும், 15-16 காலத்தில், 3.9% ஆக இருந்ததாகவும், 16-17 ஆண்டுகளில் 3.5 சதவிகிதமாகவும், 17-18ல் 3.4% ஆகவும், 18-19ல் 3.4 சதவிகிதமாக பணப்பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியின் பொழுது, 08-09 ஆண்டுகளின் பொழுது, 6.1% ஆகவும், 09-10 ஆண்டுகளின் பொழுது 6.6% ஆகவும், 10-11 ஆண்டுகளின் பொழுது 4.9% ஆகவும், 11-12 ஆண்டுகளின் பொழுது 5.9% ஆகவும், 12-13 ஆண்டுகளின் பொழுது 4.9% ஆகவும், 13-14 ஆண்டுகளின் பொழுது 4.5% ஆகவும் இருந்ததாக தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் பச்சைத் துளிர்கள் தெரிவதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களும், நிர்வாகங்களும் இந்தியாவின் பொருளாதாரத்தினை நம்புவதாகவும் தெரிவித்தார்.

HOT NEWS