அவசர நிலை கிடையாது! இராணுவம் மறுப்பு!

31 March 2020 அரசியல்
indianarmy.jpg

இந்தியாவில் அவசர நிலையானது, பிரகடனப் படுத்தப்பட மாட்டாது என, இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கானது அமலில் உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கானது அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய போக்குவரத்தினைத் தவிர, பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. வீதிகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளன.

ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் தன்னுடைய இராணுவம், முன்னாள் இராணுவத்தினர், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களை களமிறக்கி, அவசர நிலையைப் பிறப்பிக்கும் என்றத் தகவல்கள், சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவின.

இது, இந்திய இராணுவத்தின் பார்வைக்குச் சென்றது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இது குறித்து விளக்கமளித்துள்ளது இந்திய இராணுவம். அதன்படி, அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்படும் என்பது ஒரு புரளி. இது ஒரு பொய்யான செய்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம். கண்டிப்பாக அவசர நிலையானது, பிரகடனப் படுத்தப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

HOT NEWS