5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம் ரத்து! செங்கோட்டையன் அறிவிப்பு!

23 January 2020 அரசியல்
sengottaiyan1212.jpg

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்விற்கு மாணவ, மாணவியரின் பொதுத் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நேற்று, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பயன்பெறும் பொருட்டு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும், 5 மற்றும் 8ம் வகுப்புப் படிக்கும் சிறப்பு குழந்தைகளுக்கு, எவ்விதமான சலுகை அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு ஓரிரு வாரத்தில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS