கேரளாவில் மே-17 வரை டாஸ்மாக் லீவு! முதல்வர் அதிரடி அறிவிப்பு!

06 May 2020 அரசியல்
keralacm.jpg

வருகின்ற மே-17ம் தேதி வரை, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது, என, கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும், பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மே-7ம் தேதி அன்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. தொடர்ந்து, 40 நாட்களுக்கும் மேலாக, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடுகட்டுவதற்கு, 10 முதல் 15 சதவிகித கூடுதல் வரியினையும், தமிழக அரசு விதித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் டாஸ்மாக் திறப்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்து பேசிய பினராய் விஜயன், மதுக் கடைகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க இயலாது எனவும், கோயில்களை மூடியிருக்கின்ற நிலையில், ஒயின்ஷாப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது எனவும் காட்டமாகக் கூறினார்.

போலீஸாருக்கு வேறு வேலைகள் உள்ளது எனவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் சமூக இடைவெளி இல்லாமல் போய்விடும். எனவே, ஊடங்கு முடியும் வரை, ஒயின்ஷாப்புகளுக்கு அனுமதி கிடையாது என, அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS