நித்தியானந்தா தற்பொழுது மீண்டும், சமூக வலைதளங்களில் பிஸிசாயக உள்ளார். இந்த முறை அவர் களமிறங்கியிருப்பது டிக்டாக்கில்.
இந்தியா அரசாங்கத்தால் தேடப்படும் நபராக இருப்பவர் நித்தியானந்தா. பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தில், நில அபகரிப்பு என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டு உள்ளன. இதனால், அவரை போலீசார் கைது செய்து விசாரிக்க முயற்சித்து வருகின்றனர். இந்திய உளவுத்துறை, புலனாய்வுத் துறை, இந்திய போலீஸ் அதிகாரிகள் என யாராலும் சுவாமியினைப் பிடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து, இன்டர்போல் உதவியினை நாடியது மத்திய அரசு.
இன்டர்போல் சார்பில், அனைத்து நாடுகளுக்கும் ப்ளூகார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், எவ்விதப் ப்ரயோஜனமும் இல்லை. அவர் தனியாக ஒரு நாட்டினை உருவாக்கி விட்டதாகவும், அதற்கு கைலாசா எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த நாட்டிற்கான கொடி, பாஸ்போர்ட் முதலியவைகளையும் தன்னுடைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.
மேலும், தன் நாட்டிற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என, ஹநா சபைக்கு கடிதம் ஒன்றினையும் எழுதி இருந்தார். இது தவிர்த்து, தினமும் தன்னுடைய யூடியூப் சேனல் மூலம், பிரசங்க வீடியோக்களை வெளியிட்டபடி இருந்தார். தன்னுடைய வலதளத்தில் வந்து, கைலாசா நாட்டின் பொதுமக்களாக இணைய, 40 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். தன்னுடைய நாட்டில், தமிழ், ஆங்கிலம், சமஸ்க்ருத மொழிகள் ஆட்சி மொழிகள் எனவும் அறிவித்தார்.
இதனிடைய, கற்பழிப்பு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த ஜாமீன் மறுக்கப்பட்டதால், அவரைக் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து தன்னுடைய பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். அதில், நான் ஒரு புறம்போக்கு, ஒரு பரதேசி எனவும் கூறினார்.
இந்நிலையில், சில நாட்களாக அமைதியாக இருந்த நித்தியானந்தா, தற்பொழுது தன்னுடையக் கெட்டப்பினை மாற்றிவிட்டார். வெள்ளை தாடி, வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் தலை முடி என அடுத்தப் பரிமாணத்திற்கு, நித்தியானந்தா சென்றுவிட்டார். அவருடைய சிஷ்யையகளும் அவ்வாறு அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார்.
தற்பொழுது டிக்டாக்கில் புதிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், நித்தியானந்தாவின் புகைப்படம் பின்னால் உள்ளது. அந்தப் புகைப்படத்தினைப் பார்த்து, பெண்கள் சுற்றும் பேரழகன் எவனோ அவனே காதல் மன்னன் என்ற பாலுக்கு, நித்தியானந்தாவினைக் காட்டுகின்றனர். மேலும், கண்ணாளனே என்ற பாம்பேப் படப்பாடலுக்கும் ஆடுகின்றனர். பின்னர், சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்றப் பாடலையும் ஓடவிட்டு சிரித்து மகிழ்கின்றனர்.
இது தற்பொழுது டிக்டாக்கில் வைரலாகி உள்ளது. இதுவரை, யூடியூப், பேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலம் வீடியோ வெளியிட்டு வந்த சாமியார், தற்பொழுது டிக்டாக்கிற்கு சென்றுவிட்டார். இன்னும், இவரைத் தேடிக் கொண்டு இருக்கின்றது போலீஸ்.