அயோத்தி வழக்கில் மேல் முறையீடு இல்லை! சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு!

27 November 2019 அரசியல்
supremecout.jpg

அயோத்தி வழக்கின் முடிவினை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதில்லை என, சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

உத்திரப்பிரசேத்தில் உள்ள அயோத்தியில், பாபர் மசூதி கட்டுவதா அல்லது இராமர் கோவில் கட்டுவதா என்ற நீண்ட காலப் பிரச்சனைக்கு, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரியப் பகுதியில் இராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இதற்கான கமிட்டியை உருவாக்க வேண்டும் எனவும், மத்திய அரசை அறிவுறுத்தியது. மேலும், பாபர் மசூதி கட்டுவதற்கு, ஐந்து ஏக்கர் நிலத்தினை உத்திரப்பிரதேசத்தின் வேறு பகுதியில் வழங்க உத்தரவிட்டது.

இதனை பல இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டாலும், ஒரு சிலர் அதனை ஏற்கவில்லை. இதனையடுத்து, நேற்று சன்னி வக்பு வாரியக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து, எவ்வித முடிவும் எட்டபடவில்லை என அதன் தலைவர் ஜூபர் பரூக்கி தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கையும் வைக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS