இனி முன்னாள் பிரதமர் குடும்பங்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு கிடையாது! மத்திய அரசு அதிரடி!

23 November 2019 அரசியல்
spgguard.jpg

இனி முன்னாள் பிரதமர்களுக்கும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என, மாநிலங்களவையில், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் அறிவித்தார்.

இதற்கான சட்டத் திருத்தம், விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும், அதற்கானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் அறிவித்தார். இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு ஏற்கனவே, கடந்த 20ம் தேதி அன்று மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது.

இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கும், அவர்களுடையக் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை எஸ்பிஜி திரும்பப் பெற்றுக் கொண்டது. அதற்குப் பதிலாக, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை, தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்து வந்த எஸ்பிஜி துறையினருக்கு தங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றித் தெரிவித்திருந்தார் ராகுல் காந்தி.

HOT NEWS