பணம் இல்லை! புதிய திட்டங்கள் இனி ஒரு ஆண்டுக்கு கிடையாது!

06 June 2020 அரசியல்
nsitharaman.jpg

இந்த ஆண்டு வேறு எந்த திட்டமும் இனிமேல் கிடையாது என, மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. விற்பனை என்பது கிட்டதட்ட முடிவிற்கு வந்து விட்ட காரணத்தால், பல தொழிற்சாலைகள் வேலை செய்யும் பணியாளர்களை நீக்கி வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாத்திய சூழ்நிலைகளை கையாள்வதற்காக, பல புதிய முயற்சிகளை இந்திய அரசாங்கம் அறிவித்துக் கொண்டே இருக்கின்றது. இதில், கடந்த மாதம் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு புதிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த சூழ்நிலையில், தற்பொழுது மத்திய நிதித்துறையானது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு புதிய திட்டங்களுக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படாது எனவும், பிரதமரின் காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்திற்கு கீழ் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்படும் எனக் கூறியுள்ளது. எனவே, இந்த ஆண்டு முழுக்க, புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்குங்கள் என எந்த அமைச்சகமும் கடிதம் அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

HOT NEWS