நேபாளத்துடன் NO பேச்சுவார்த்தை! இந்தியா முடிவு!

16 June 2020 அரசியல்
amitshahoffice.jpg

இந்தியாவின் நேபாளத்துடனான எல்லைப் பகுதிகளை, தன்னுடைய நாட்டுடன் இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தினை வெளியிட்டது. இதனால், தற்பொழுது இரண்டு நாடுகளுக்கு இடையிலும் புதிய மோதல் உருவாகி வருகின்றது.

நேபாளத்தின் நாடாளுமன்றத்தில், நேபாள நாட்டின் புதிய வரைபடம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சர்ச்சைக்குரிய வகையில் இணைத்து இருந்தது. இதனை, இந்திய அரசாங்கம் வன்மையாபக் கண்டித்தது. இருப்பினும், அதனைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து வரைபடத்தின் மீதான வாக்கெடுப்பினையும் நடத்தியது. பின்னர், அந்த வரைபடமே, அதிகாரப்பூர்வ வரைபடமாக நேபாள அரசாங்கம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, இனி நேபாள அரசாங்கத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவத்திலை என, காட்டமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பலங்கால நட்புறவானது, இதனால் பாதிப்படையாது எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நேபாள அரசாங்கம் சீனாவின் தூண்டுதலால், இத்தகையப் பல செயல்களை இந்தியாவிற்கு எதிராக செய்து வருகின்றது எனப் பலரும் கூறி வருகின்றனர்.

HOT NEWS