சசிகலாவிற்கு கட்சியில் இடமில்லை! ஜெயக்குமார் திட்டவட்டம்!

10 July 2020 அரசியல்
jayakumar2.jpg

சசிகலா மற்றும் அவருடையக் குடும்பத்தாருக்கு, அதிமுகவில் இடமில்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 2021ம் ஆண்டு, சிறைத் தண்டனை முடிந்து, வெளியில் வர உள்ளார் சசிகலா. இதனை முன்னிட்டு, பல மாற்றங்கள் அரசியலில் நடைபெறும் என, அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அவருக்கு எதிர்ப்புக் குரல்கள், அஇஅதிமுகவில் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

இன்று தேசிய மீன் வளர்ப்போர் தினக் கருத்தரங்கில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் நிலைப்பாடு எப்பொழுதுமே ஒன்றுதான். அப்பொழுது, இப்பொழுது, எப்பொழுதுமே சசிகலாவும் அவருடையக் குடும்பத்தாரும் இல்லாமல், கட்சியும் ஆட்சியும் நடத்துவது தான் அந்த நிலைப்பாடு என்றுத் தெரிவித்துள்ளார்.

இவர் தன்னிடம் கொரோனாவிற்கு மருந்து இருப்பதாகக் கூறினார். அதுமட்டுமின்றி, தன்னால் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த இயலும் எனவும் அவர் கூறினார். இதனால், இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இவர் சென்னையை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன், ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

HOT NEWS