அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என, தமிழக அரசு மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம் தொடர்ந்து, சர்ச்சையில் இருந்து கொண்டே இருக்கின்றது என்பது தான் உண்மை. அரியர் தேர்ச்சி விவகாரம், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது எனப் பல்வேறு சர்ச்சைகள் அண்ணா பல்கலைக் கழகத்தினை சுற்றி வந்து கொண்டே உள்ளது. இன்ஸ்ட்டியூட் ஆஃப் எமினென்ஸ் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு, தமிழகத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டு தமிழக அரசு குழு ஒன்றினை நியமித்து இருந்தது.
இந்தக் குழுவானது பல்வேறு ஆய்வுகளைச் செய்த பின்னர், தற்பொழுதுது கடிதம் ஒன்றினை மத்திய அரசிற்கு அனுப்பி உள்ளது. அந்தக் கடிதத்தில், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்றுக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா சொல்வது போல், பணம் திரட்ட இயலாது எனவும் கூறியுள்ளது.
ஏற்கனவே, மத்திய அரசிற்கு சூரப்பா எழுதியக் கடிதத்தில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு 350 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனை பொருட்டு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், பிரச்சனைகள் சரியாகிவிடும் எனவும் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்பொழுது மத்திய அரசிற்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுபப்பட்டு உள்ளது.