உலகளவில் பிரசித்திப்ப எற்ற நோபல் பரிசிற்கு இந்த ஆண்டு, ஹெப்படைட்டிஸ் சி நோய்க்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், இயற்பியல், வேதியியல், உயிரியல், அமைதி, பொருளாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசானது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசானது, ஹெப்படைட்டிஸ் சி நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகளான ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் மிச்சல் ஹோட்டன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.
இதுவரை ஹெப்படைட்டிஸ் ஏ மற்றும் ஹெப்படைட்டிஸ் பி ஆகியவைகளுக்கு மட்டுமே மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருந்த நிலையில், ஹெப்படைட்டிஸ் சி நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள இவர்கள் மாபெரும் சாதனையாளர்களாகத் தற்பொழுது பார்க்கப்படுகின்றனர்.