நார்வேயில் புதிய அச்சம்! கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 29 பேர் பலி!

17 January 2021 அரசியல்
vaccination1.jpg

நார்வே நாட்டில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியினை பயன்படுத்திய 29 பேர் பலியான சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு, தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இங்கிலாந்து நாட்டில் அமெரிக்கா நாட்டினைச் சேர்ந்த மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள் தயாரித்து உள்ள, தடுப்பூசிகளை அவசரக் காலப் பயன்பாட்டிற்காக அனுமதித்து உள்ளனர். சீனாவில், அந்நாடு தயாரித்து உள்ள தடுப்பூசியினை பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்யாவில், உலகிலேயே முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி ஊசியானது தற்பொழுது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை பல நாடுகளும் வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர். அரபு நாடுகளோ, சீனாவின் தடுப்பூசியினை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவினைப் பொறுத்த மட்டில் சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உள்ள கோவாக்ஸின் மற்றும் கோவிசீல்டு மருந்துகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இதில் நார்வே நாட்டினைச் சேர்ந்தவர்களும், தற்பொழுது தடுப்பூசியினை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் புதிய சர்ச்சையானது எழுந்துள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா மருந்தினை, பொதுமக்களுக்கு வழங்கியதில் 29 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறையானது புதியத் தகவலை வெளியிட்டு உள்ளது.

அதில், 13 பேரின் மரணம் குறித்த விசாரணை முடிந்து விட்டதாகவும், 16 பேரின் மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தடுப்பூசியினை வயதானவர்கள், முதியோர்கள் பயன்படுத்துவது அவரவர் தனிப்பட்ட சுய பரிசோதனையே எனவும், நாங்கள் வற்புறுத்துவது கிடையாது எனவும் கூறியுள்ளது. அத்துடன், இந்த மருந்தினை மிகவும் வயதானவர்கள் எடுத்துக் கொள்கின்ற பட்சத்தில், தீராத காய்ச்சல், உடல்வலி, தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன எனவும் கூறியுள்ளது.

இந்த மருந்தானது 90% பாதுகாப்பானது எனக் கூறப்பட்ட நிலையில், இந்த செய்தியால் தற்பொழுது பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

HOT NEWS