தென் கொரியாவுடன் மோதல்! தொடர்பு அறையை குண்டு வைத்து முடித்த வடகொரியா!

17 June 2020 அரசியல்
missiletestnk.jpg

தென்கொரியாவினை தொடர்பு கொள்வதற்காக, எல்லையில் அமைத்திருந்த தொடர்பு அறையினை வடகொரியா இராணுவம் குண்டு வைத்து தகர்த்தது.

தென் கொரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுக்க, கிம் ஜோங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங் உத்தரவிட்டார். மேலும், இரு நாட்டுக்கும் இடையில் உள்ள இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதப் பகுதிகளுக்குள் நுழையத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜோங் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, வடகொரிய இராணுவம் தற்பொழுது தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், இரண்டு நாட்டிற்கும் பொதுவாக இருக்கும் கேசாங் என்றப் பகுதியில் ஒரு தகவல் தொடர்பு மையம் உள்ளது. அதனைப் பயன்படுத்தித் தான், இரண்டு நாடுகளும் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அந்த மையமானது தற்பொழுது வடகொரிய இராணுவத்தினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு உள்ளது.

இதனை, வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தென் கொரியாவின் செயல்கள் அனைத்தும், வடகொரிய மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், அதனை மக்கள் வெறுப்பதாகவும் அதனால் இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், வடகொரியாவின் செயல் குறித்து உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் தென் கொரிய அதிபர் மூன் சே ஆலோசனை நடத்தி வருகின்றார்.

HOT NEWS