வடகொரியாவின் மிக பெரிய ஏவுகணை! அமெரிக்காவினை சாம்பலுக்கும் என பீதி!

12 October 2020 அரசியல்
northkoreamissile.jpg

வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவில், அந்நாட்டின் புதிய ரக பெரிய ஏவுகணையானது ஊர்வலத்தில் வந்ததால், உலகளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில், கடந்த சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகின்றது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்காவிற்குப் பல அச்சுறுத்தல்களை விடுத்த வண்ணம் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம்மும் சந்தித்து பேசியதால், பதற்றம் குறைந்தது. இருப்பினும், வட கொரிய அரசு, தொடர்ந்து இராணுவ பலத்தினை அதிகரிப்பதில் மும்முரமாக செயல்பட்ட வண்ணம் இருந்தது.

அந்த நாட்டில் வாரம் இரு முறையாவது, ஏவுகணை சோதனை நடைபெறுவது வாடிக்கையாக இருந்து வருகின்றது. தற்பொழுது உலகளவில் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், வடகொரியா ஏவுகணை சோதனைகளை பெரிய அளவில் நடத்தவில்லை. இந்த சூழ்நிலையில், எங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை எனக் கூறிய கிம், அந்த நாட்டில் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

அந்த அணி வகுப்பில், பல ஆயுதங்களும், வீரர்களும், ஏவுகணைகளும் ஊர்வலமாக வந்தன. அதில், புதிய ரக ஏவுகணை ஒன்று வலம் வந்தது. அது பார்ப்பதற்கு மிகவும் பெரியதாகவும், வலிமையானதாகவும் காட்சித் தந்தது. இந்த ஏவுகணையினை, அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகளாலும் தாக்கி அழிக்க முடியாது எனவும், ஏவுகணைகளுக்கான எதிர்ப்பு வளையங்களாலும் இதனை தடுக்க இயலாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணைக்கு ஹவாசாங்-16 எனப் பெயர் வைத்துள்ள வடகொரியா இதனை ஊர்வலத்தில் காட்டியது, உலகளவில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது உலகின் மிகப் பெரிய ஏவுகணையாகப் பார்க்கப்படுகின்றது. இது ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் எடை வரை இருக்கலாம் எனவும், இந்த ஏவுகணையினை ஒரு முறைப் பயன்படுத்தினால் 25 லட்சம் பேர் நொடிப் பொழுதில் சாம்பலாகி விடுவார்கள் எனவும் கணக்கிட்டு உள்ளனர்.

HOT NEWS