வடகொரியாவில் உணவுப் பொருட்களை வீணடித்தால் கடுமையானத் தண்டனை வழங்கப்படும் என, புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டு உள்ளது.
வடகொரிய நாடானது, மற்ற நாடுகளை விட மிகவும் விசித்திரமானது. அந்நாட்டில் பலப் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. அங்கு தற்பொழுது தான், ஹகிபிஸ் புயலானது கோரத் தாண்டவம் ஆடிவிட்டு கரைக் கடந்து உள்ளது. அதனால் பல ஆயிரம் வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. அதனை புணரமைக்கும் முயற்சியில், அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது புதியதாக ஒரு பிரச்சனை அங்கு வெடித்துள்ளது.
கடுமையானப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுள்ள வடகொரியாவில், பசி மற்றும் பட்டினிப் பிரச்சனையானது பயங்கரமாகத் தலைதூக்கி உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை வேறு உள்ளதால், அங்கு பசிப் பிரச்சனையினை சமாளிக்கும் பொருட்டு புதிய சட்டமானது விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அந்நாட்டில் எந்த நிகழ்வில் எவ்விதமான உணவுகளை பயன்படுத்த வேண்டும் என்ற மெனுவினையே, அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டு உள்ளது.
மேலும், உணவுப் பொருட்களை வீணடித்தால் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டு உள்ளது. அந்நாட்டில், உணவுப் பஞ்சத்தால் பொதுமக்கள் எலிக் கறியினை உண்டு வருவதாகவும், பலரும் பசியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.