மாஸ்க் அணியா விட்டால் புதுவகை தண்டனை! அசத்தும் வடகொரியா!

24 July 2020 அரசியல்
coronachina20.jpg

எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்றுக் கூறிய வடகொரிய அதிபர், தற்பொழுது புதிய உத்தரவினை விடுத்துள்ளார்.

வடகொரியாவில் சொல்லிக் கொள்ளும் படி, கொரோனா பரவல் ஏற்படவில்லை. அதற்கு முக்கியக் காரணமே, பொருளாதாரத் தடையும், பாதுகாப்பின்மையும் தான். இதனால், உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள், வடகொரியாவிற்கு வருவதில்லை. இதனால், கொரோனா வைரஸ் பரவவில்லை. இருப்பினும், தற்பொழுது அந்த நாட்டு அரசாங்கமும் புதிய அறிவிப்பினை அதிரடியாக வெளியிட்டு உள்ளது.

அதன்படி, இனி யாராவது முகக் கவசம் அணியாமல் வீட்டினை விட்டு வெளியே வந்தால், கண்டிப்பாக அபராதமும், வடகொரிய நாட்டிற்காக கடுமையாக மூன்று மாதம் உழைக்க வேண்டி இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் தற்பொழுது அனைத்து இடங்களுக்குச் செல்லும் பொழுதும், முகக்கவசம் அணிந்து செல்கின்றனர்.

பொதுமக்களைக் கண்காணிக்கும் பொருட்டு, புதிய கண்காணிக்கும் குழு ஒன்றினையும் வடகொரிய அரசு நியமித்து உள்ளது. வடகொரியாவில் அரசாங்க விதிகளை மீறினால், கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இந்த முகக்கவசம் விவகாரத்திலும், விரைவில் தண்டனைகள் கடுமையாக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS