தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை!

30 October 2019 அரசியல்
rainhome.jpg

தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில், நேற்று இரவு முதல் கன மழைப் பெய்து வருகின்றது. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி ஆரம்பிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், தற்பொழுது வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

கன்னியா குமரியின் கடற்பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலையானது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், வேலூர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் சிவகங்களை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மழைப் பெய்து வருவதால், பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றது.

HOT NEWS