நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

25 October 2019 அரசியல்
edappadipalanisamy.jpg

நவம்பர் ஒன்றாம் தேதியை இனி, தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையையும் வெளியிட்டு உள்ளது.

கர்நாடகா போன்ற மாநிலங்கள், தங்களுக்குரிய நாள் ஒன்றினைத் தேர்வு செய்து, தங்கள் மாநிலத்தினை உருவாக்கிய நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு என நவம்பர் ஒன்றாம் தேதியினை தேர்ந்தெடுத்துள்ள தமிழக அரசு அன்று, தமிழ்நாடு நாள் என்ற விழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.

கடந்த 1956ல் தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் வகையில், இந்த விழா கொண்டாடப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்காக 10 லட்ச ரூபாயையும் ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளது.

HOT NEWS