ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்குகின்றது என்பிஆர் பணிகள்! முதலில் ஜனாதிபதி என தகவல்!

12 February 2020 அரசியல்
ramnathgovidspeech.jpg

வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில், சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி திட்டங்கள். மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. இதற்குப் பலத்த எதிர்ப்புகள் நிலவி வந்தாலும், இதனை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், வருகின்ற 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கிடும் பணிகளும், தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று என்பிஆர் குறித்த ஆரம்பகட்ட பணிகள் தொடங்க உள்ளன. இந்தியக் குடியரசுத் தலைவர் தன்னுடைய முதல் பெயரினை பதிவு செய்து ஆரம்பிப்பார் எனவும், அதனைத் தொடர்ந்து இந்திய மக்களிடம் இது குறித்து, பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு, காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியினர் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, இது 2021ம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் ஆரம்பமே என்று கூறியுள்ளது.

HOT NEWS