தங்க தமிழ் மகன் விருது! ரைசிங் ஸ்டார் விருது! கொண்டாடும் அதிமுகவினர்!

11 November 2019 அரசியல்
opschicago.jpg

தமிழக துணை முதலமைச்சரும், அஇஅதிமுக கட்சியின் கழக ஒருங்கிணைப்பாளருமான திரு.ஓ.பன்னீர் செல்வம், அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ஓ.பி.ரவீந்தரிநாத் உட்பட பலர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

அமெரிகாவில் உள்ள, சிகாகோ மாநகரில் அமைந்துள்ள சிகாகோ தமிழ் சங்கமானது, துணை முதல்வருக்கு தங்கத் தமிழ் மகன் என்றப் பட்டத்தினை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. இந்த விருதினைப் பெற்றதில் தான் மிக்க மகிழ்ச்சி அடைவதாக திரு. பன்னீர் செல்வம் மகிழ்ச்சித் தெரிவித்தார்.

மேலும், இன்று காலையில் ஆசியாவின் சர்வதேச வளரும் நட்சத்திரம் (ரைசிங் ஸ்டார்) என்ற விருதானது, பன்னீர் செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

HOT NEWS