ஒடிசா முதல்வரை சந்தித்த கமல்ஹாசன்! டாக்டர் பட்டம் பெற்றார்!

19 November 2019 அரசியல்
kamalhaasandoctor.jpg

நேற்று, ஒடிசா முதல்வர் திரு நவீன் பட்நாயக்கினை சந்தித்தார். இதனையடுத்து, இன்று கமல்ஹாசனுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

இது குறித்து பேட்டியளித்த நவீன் பட்நாயக், நீண்ட காலங்களுக்குப் பிறகு, புவனேஷ்வருக்கு கமல்ஹாசன் வந்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. அவர் தற்பொழுது அரசியல் கட்சியும் ஆரம்பித்து உள்ளார். அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள். கூட்டணி குறித்து கமல் பேசினாரா என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்பொழுது பேசிய கமல்ஹாசன், அரசியல் அறிவுரைகளைப் பெறவே நான் இங்கு வந்துள்ளேன் என கூறினார். இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார் ஒடிசா முதல்வர்.

HOT NEWS