ஒடிசாவில் ரயில் தடம் புரண்டது! 20 பேர் காயம்! பனி மூட்டத்தினால் விபத்து!

17 January 2020 அரசியல்
orissarailderailed.jpg

ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் இருந்து புவனேஷ்வர் செல்லும் லோகமான்யா திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயிலானது, நேற்று காலை ஏழு மணி அளவில் தடம் புரண்டதில் 20 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கட்டாக் பகுதியில் உள்ள நெருங்குடி ரயில் நிலையம் அருகே நடைபெற்றுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக, இரயிலின் எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டன. கடுமையானப் பணி மூட்டத்தின் காரணமாக, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வண்டியின் கார்ட் பெட்டியில் மோதியதில், பயணிகள் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட, மொத்தம் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி விசாரணை நடத்திய போலீசார் முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், கடுமையானப் பனிமூட்டத்தின் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்ட் பெட்டியில், பயணிகள் ரயில் மோதியுள்ளது. இதனால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட, அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 17-01-2020ம் தேதி அன்று, காலையில் இந்த விபத்து குறித்து, ரயில்வே நிர்வாகம் விசாரிக்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS