ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஊரே ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளது அம்பலம்! இருவர் கைது!

01 March 2020 அரசியல்
olxscam.jpg

இந்தியாவில் 100 கோடிக்கும் மேல், ஆன்லைனைப் பயன்படுத்தி மோசடி செய்த ஊரைப் பற்றிய அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் என்ற மாவட்டத்தின் தூனவர் என்ற கிராமத்தினர் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருந்துள்ளனர். உலகளவில் பிரசித்த பெற்ற நிறுவனமான ஓஎல்எக்ஸ் வலைதளத்தினை, இவர்கள் பயன்படுத்தி இருப்பது போலீஸ் முயற்சியில் தெரிய வந்துள்ளது.

இவர்கள், இணையத்தின் மூலம், ஓஎல்எக்ஸ் வலைதளத்தினைப் பயன்படுத்தி, பிஎம்டபிள்யூ கார் முதல் அனைத்து வகையானப் பொருட்களையும், செகன்ட் ஹேண்ட் முறையில் விற்பதாக, விளம்பரம் செய்வார்கள். அவர்கள் விளம்பரத்தினைப் பார்க்கும் பயனர்கள், அந்தப் பொருளை வாங்குவதற்கு, இணையத்தின் மூலம் பணம் செலுத்துவர். பணம் கைக்கு வந்த பின், அவர்கள் பயன்படுத்திய எண்ணானது செயலிழந்துவிடும். தன்னுடைய எண்ணை மாற்றி மாற்றி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவத்தினால், இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொள்ளையடித்தப் பணத்தினை, தூனவர் கிராம மக்கள் அனைவருமே பங்கு போட்டுக் கொள்வார்களாம். அந்த அளவிற்கு, இந்த கொள்ளையில், அனைவருமே ஒற்றுமையாக இருந்துள்ளனர். இந்நிலையில், இதில் முக்கியப் புள்ளிகளாக செயல்பட்ட நரேஷ் பால் சிங் மற்றும் பச்சு சிங் என்பவர்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

இருப்பினும், அந்த கிராமத்திற்குள் சென்று, அந்த இரண்டு முக்கியத் திருடர்களையும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில், தற்பொழுது அந்த இரண்டு பேரினையும், தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய இராணுவத்திற்குப் பயன்படுத்திய வாகனத்தினை வாங்கித் தருவதாக ஓஎல்எக்ஸில் நரேஷ் பால் சிங்கும், பச்சு சிங்கும் விளம்பரம் அளித்தனர். அதனைப் பயன்படுத்தி, அவர்களை தமிழக போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் விசாரிக்கையில், இதுவரை 200 கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தினை, தூனவர் கிராமமே ஒன்றாக சேர்ந்து பங்கிட்டு உள்ளது என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை, தற்பொழுது தமிழக போலீசார் தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

HOT NEWS