உமர் அப்துல்லா, மெஹபூபா முத்தி மீது பொது பாதுகாப்பு சட்டம்!

08 February 2020 அரசியல்
kashmirleaders.jpg

காஷ்மீர் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களாக, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முத்தி, மீது பொது பாதுகாப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஜம்மூ-காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு அந்தஸ்து ரத்து செயப்ப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், தற்பொழுது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் வீட்டுக் காவலில் இருந்த பல தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சமூக அமைதியினைப் பாதுகாக்கும் பொருட்டு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முத்தி ஆகியோர் மீது, பொது பாதுகாப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மெஹபூபா முத்தியின் டிவிட்டர் கணக்கு மூலம், அவருடைய மகள் கருத்து தெரிவித்துள்ளார்.

HOT NEWS