ஆம்னி பேருந்து கட்டணம்! உயர்வு கிடையாது! அதிபர்கள் திட்டவட்டம்!

15 May 2020 அரசியல்
omnibus.jpg

ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என, பேருந்து நிறுவனத்தின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது இந்தியா முழுக்க மே17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து பேசிய பிரதமர் மோடி, மே 17ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கானது நீட்டிக்கப்படும் என்றுக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதனிடையே, பல கோடிகள் புழங்கக் கூடிய ஆம்னி பேருந்துத்துறையில், புதிய தகவல்கள் சமீபகாலமாக பரவ ஆரம்பித்தன. அதில், ஆம்னி பேருந்தின் கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டது. இது குறித்து, அனைத்து ஆம்னி பேருந்துக் கழக சங்கத்தின் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவர் பேசுகையில், ஆம்னி பேருந்துத் துறையில் பல லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இது போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

எவ்வாறு இருப்பினும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகே, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறித்து முடிவு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

HOT NEWS