ஒரு வாழைப்பழம் 85 லட்சம்! ஏலத்தில் அசத்திய பழம்!

09 December 2019 அரசியல்
hungryartist.jpg

மியாமி நகரில், சுவற்றில் ஒட்டப்பட்ட வாழைப்பழமானது, சுமார் 85 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்கு சென்றுள்ளது.

மரியோ கேட்டலன் என்றப் பிரபலமான கலைஞர், பேஷல் மியாமி கடற்கரை அருங்காட்சியகத்தில் காமெடியன் என்ற தலைப்பில், வாழைப்பழம் ஒன்றினை எடுத்து, டேப் ஒன்றின் உதவியுடன் சுவற்றில் ஒட்டிவிட்டார்.

அவ்வளவு தான், பிரபலங்கள் எதை செய்தாலும் பிரபலமாகும் என்ற கணக்கின் படி, அந்த அருங்காட்சியகத்திற்கு வந்தவர்கள், வரிசையாக வந்து செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த டேவிட் டட்டூனா, அந்த வாழைப்பழத்தினை 1,20,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். வாங்கிய உடன் அதனை அங்கேயே சாப்பிட்டார். இது தற்பொழுது உலகம் முழுக்கப் பேசும் பொருளாகா மாறியுள்ளது.

HOT NEWS