ராஜஸ்தானில் ஒரு லட்சம் படுக்கைகள் தயார் படுத்தப்படுகின்றன!

23 March 2020 அரசியல்
coronavirus2019ncov.jpg

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. சீனாவினைத் தொடர்ந்து, இத்தாலியில் இந்த வைரஸானது மிக மோசமாகப் பரவி வருகின்றது. இதனால், தற்பொழுது வரை 14,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவிலும் தற்பொழுது இந்த வைரஸானது பரவ ஆரம்பித்துள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்ற நிலையில், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்காக சுமார் ஒரு லட்சம் படுக்கை வசதியினை மாநில அரசு உருவாக்க உள்ளது. அனைத்தும், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளாக இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

அம்மாநில முதல்வரின் உத்தரவுப் படி, சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்படுவதற்குத் தேவையான கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்களை, தற்பொழுது அரசு அதிகாரிகள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். தேர்ந்தெடுத்தப் பின், அந்த கட்டிடங்களில், தனிமைப்படுத்துவதற்கான அறைகள் உருவாக்கப்பட உள்ளன.

இந்த நோய்க்காக உழைக்கும் மருத்துவர்களுக்காகவும், அவர்களுடைய சேவைக்காகவும் 30 கோடி ரூபாயினை அம்மாநில அரசு ஒதுக்கி உள்ளது. மேலும், இலவச தொலைபேசி வசதியினையும் உருவாக்கி உள்ளது. மேலும், பணம் அளிக்க விரும்புபவர்கள், தாராளமாகப் பணமளிக்கலாம் எனவும், அதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிட்டு உள்ளது.

HOT NEWS